ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?
- IndiaGlitz, [Wednesday,November 23 2016]
ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு கே.ஜி. சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்க்கு பணம் கொண்டு சென்ற வேன் திடீரென மாயமாகியுள்ளது. அந்த வேனில் ரூ.1.37 கோடி இருந்ததாகவும், அந்த வேனை வேனின் டிரைவரை கடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினர் புலன்விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 'வேனின் டிரைவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை குறித்த தகவல்களை இப்போது வெளியிட முடியாது என்று கூறினார்.