பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏன் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,November 19 2016]
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததில் இருந்து கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்ற தினந்தோறும் வரிசையில் நின்று வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் தேங்கிய பணிகளை முடிக்க வேண்டியதுள்ளதால் இன்று ஒருநாள் பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை இன்று வங்கிகளில் மாற்ற முடியாது என்று இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை இன்று வங்கிகளில் மாற்ற முடியாது. மூத்த குடிமக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம், மற்றபடி வங்கிகள் வழக்கம்போல் நாளை திறந்து இருக்கும். அவர்களது தேங்கிய வேலைகள் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் மை வைப்பது என்ற முடிவின் மூலம் முன்பு இருந்த வரிசை தற்போது 40 சதவீதம் குறைந்துள்ளது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.