close
Choose your channels

அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடந்ததால், டான் படக்குழு மீது வழக்குப்பதிவு....!

Monday, August 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், காதல் மற்றும் காமெடி படமான டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் போன்ற முக்கிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இப்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு காட்டின் எல்லைப்பகுதிகளில் முன் அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், இயக்குனர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment