கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை மீது திடீர் வழக்குப்பதிவு… என்ன காரணம்?
- IndiaGlitz, [Thursday,January 27 2022]
கூகுள் நிறுவனத்தின் மீதும் அந்நிறுவனத்தின் செயல்தலைவர் சுந்தர்பிச்சை மற்றும் அதன் ஊழியர்கள் 5 பேர் மீதும் மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு “ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா“ எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். வெற்றிப்படமான இந்தத் திரைப்படத்தை சிலர் யூடியூப்பில் முறைகேடாகப் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை கூகுள் அனுமதிப்பது காப்புரிமை விதிமீறலகும் என்று இயக்குநர் சுனில் தர்ஷன் மும்பை அந்தேதி அப்அர்டன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் பேசிய இயக்குநர் சுனில் தர்ஷன் யூடியூபில் பதிவேற்றப்பட்ட படத்தை கூகுள் அனுமதித்து இருப்பது காப்புரிமை சட்டத்தை மீறியதாகும். இதனால் கூகுள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறித்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று கூகுள் செயல்தலைவர் சுந்தர்பிச்சைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து காப்புரிமை விதிமீறல் தொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.