4 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்த வழக்கு… நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குக்காக சிறையில் இருக்கும் சசிகலா ஆகியோரைக் குறித்து அவதூறாக பேசினார் என்ற குற்றத்திற்காக இந்த வழக்கு போடப்பட்டு உள்ளது.
முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திமுக கட்சிக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது உதயநிதி, “இந்த ஆட்சியை எடப்பாடி ஆட்சி என்கிறார்கள் ஆனால் மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம் எனக் குறிப்பிட்டார். அதோடு, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு, டேபிள் சேர்க்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தார் என்று பேசியதோடு மிகவும் மோசமான சில வார்த்தைகளையும் இவர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோவும் கடந்த வாரம் சமூக வலைத்தளத்தில் வெளியாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜகவை சேர்ந்த குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர். இதனால் உயதநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் உதயநிதியின் பேச்சு பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது என.ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் அண்மையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் ராஜலட்சுமி கொடுத்த விடியோக்களை ஆய்வு செய்து பின்னர் ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com