கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு....! திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...?

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் திமுக கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முசிறியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து, திமுக முதன்மை செயலாளர் மற்றும் மேற்குத்தொகுதியின் வேட்பாளரான கே.என்.நேரு அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டு, பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். தற்சமயம் வேட்பாளருடன், கட்சி நிர்வாகிகள் பலரும் பணப்பட்டுவாடா குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது கோபமடைந்த நேரு ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய உரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் இதற்கு சரியான ஆதாரங்களை எடுத்து, காவல் துறையினரிடம் புகாரளித்தனர். அதன்படி ஆபாச வார்த்தைகளை பேசியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் நேரு மீது வழக்குபோடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்தாகுமா..? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்த வண்ணம் உள்ளது.