டிக்கெட் விற்பனையில் பெரிய முறைகேடு… சிஎஸ்கே நிர்வாகம் மீது வழக்குப் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக சிஎஸ்கே அணியில் விளையாடிவரும் மகேந்திர சிங் தோனிக்கு 41 வயதான நிலையில் அவர் இந்தப் போட்டியோடு அவர் ஓய்வுபெற்றுவிடுவார் என்பதுபோன்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து தோனி விளையாடும் ஒரு மேட்சையாவது பார்த்துவிட வேண்டும் என்று கருதிய பொதுமக்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே போட்டிகளின்போது அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
மேலும் டிக்கெட்டுகள் கிடைக்காமல் வெளியூர்களில் இருந்து வந்தெல்லாம் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அதேபோல கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடிய லீக் போட்டியின்போது டிக்கெட் விற்பனையில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் தழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றிற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் டிக்கெட்டுகள் முறைகேடாகப் பெறப்பட்டு அதிக விலை வைத்து விற்கப்பட்டதாகவும் இதனால் ஆன்லைன் டிக்கெட் மற்றும் முன்பதிவு விவரங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுக்களுக்கான போட்டி டிக்கெட்டுகளின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தவேண்டும் என்றும் டிக்கெட் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது 16 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கான முதல் தகுதி மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் வரும் மே 23, 24 ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் மேலும் சிஎஸ்கே அணி விளையாடிய போட்டிகளின்போது விற்கப்பட்ட டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருப்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments