அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு: கட்-அவுட், போஸ்டர் எல்லாம் வேஸ்ட்டா?

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி என்றும் தமிழக அரசு அறிவித்தது

இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கு கட்-அவுட் மற்றும் போஸ்டர்களை அடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் என அறிவிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து இமெயில் வந்துள்ளதாகவும் இதுகுறித்து இறுதி முடிவை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்

ஆனால் இதற்கு பதில் கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் ஆல்பாஸ் முடிவை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்ப கழகம் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிவந்த தகவல் தவறு என்றும் தமிழக அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ’அரியர் தேர்வுகளை தள்ளி வைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாகவும், விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஆல்பாஸ் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் கட்-அவுட், போஸ்டர் எல்லாம் வேஸ்ட் ஆகிவிடுமோ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.