பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை மீது மோதியதால் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து இந்தியப் பெருங்கடல் அருகேயுள்ள சர்வதேச பாதுகாப்பு தளமான பாயிண்ட் எஸ்னி பகுதியில் நடைபெற்றதாகவும் தெரிய வருகிறது. மேலும் விபத்துக்குள்ளான கப்பல் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. வகாஷியா என்ற நிறுவனத்தினுடையது எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தினால் சேதமடைந்த கப்பலிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டு வருவதாகவும் அதைச் சரிசெய்ய மொரிஷீயஸ் அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் கசிவை முற்றிலும் சரிசெய்ய முடியாத நிலையில் இதுவரை 1,000 டன் பெட்ரேல் கடலில் கலந்து இருக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான கப்பல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அதிலுள்ள 3,800 டன் பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொரிஷியஸ் மீன்வளத்திற்காக பெருமளவு கடலை சார்ந்துள்ளது. அதிகளவிலான பெட்ரோல் கடலில் கலந்தால் கடல் வளம் குறைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தற்போது கவலைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் கலக்கும் இதுபோன்ற கழிவுகளை அகற்றுவதற்குப் போதுமான தொழில்நுட்பக் கருவிகள் மொரிஷியஸிடம் இல்லாத நிலையில் தற்போது பிரான்ஸ் அரசிடம் உதவியைக் கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments