பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

 

கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை மீது மோதியதால் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து இந்தியப் பெருங்கடல் அருகேயுள்ள சர்வதேச பாதுகாப்பு தளமான பாயிண்ட் எஸ்னி பகுதியில் நடைபெற்றதாகவும் தெரிய வருகிறது. மேலும் விபத்துக்குள்ளான கப்பல் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. வகாஷியா என்ற நிறுவனத்தினுடையது எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தினால் சேதமடைந்த கப்பலிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டு வருவதாகவும் அதைச் சரிசெய்ய மொரிஷீயஸ் அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் கசிவை முற்றிலும் சரிசெய்ய முடியாத நிலையில் இதுவரை 1,000 டன் பெட்ரேல் கடலில் கலந்து இருக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான கப்பல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அதிலுள்ள 3,800 டன் பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொரிஷியஸ் மீன்வளத்திற்காக பெருமளவு கடலை சார்ந்துள்ளது. அதிகளவிலான பெட்ரோல் கடலில் கலந்தால் கடல் வளம் குறைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தற்போது கவலைத் தெரிவித்து வருகின்றனர். கடலில் கலக்கும் இதுபோன்ற கழிவுகளை அகற்றுவதற்குப் போதுமான தொழில்நுட்பக் கருவிகள் மொரிஷியஸிடம் இல்லாத நிலையில் தற்போது பிரான்ஸ் அரசிடம் உதவியைக் கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும்

மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில்

கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது