டெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள், கொலம்பியா மாகாணம் பகுதியில் கார் பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் கலந்து கொண்டு லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப், ஹரியாணா, ஒரிசா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுமாறு கடந்த சில தினங்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்டி மத்திய அரசு புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று முன்தினம் மத்திய வோளாண் துறை அமைச்சர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து 34 விவசாயச் சங்கத் தலைவர்களுடான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்தப் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல வடமாநிலங்களில் புதிய வோளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா பிரதமரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் கார் பேரணி ஒன்றை நடத்தி இருக்கின்றனர். அந்தப் பேரணியில் கனட கொடியை காரில் ஏற்றிக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகளை பதாகைகளாக பிடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout