கோவா ட்ரிப் சென்ற விஜய் பட நடிகை டிரைவரை ஏமாற்றினாரா? பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

தளபதி விஜய் நடித்த ’போக்கிரி’ படத்தில் இடம்பெற்ற ’என் செல்லப்பேரு ஆப்பிள்’ என்ற பாடலில் நடித்திருந்தவர் கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் ’வேட்டையாடு விளையாடு’ ’கந்தசாமி’ உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் ’மம்பட்டியான்’ ’மறந்தேன் மன்னித்தேன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, தற்போது சினிமா வாய்ப்பு இல்லாததால் இவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை முமைத்கான் தனக்கு தரவேண்டிய ரூபாய் 15,000 ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டதாக ஐதராபாத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா செல்ல வேண்டும் என்று தன்னுடைய காரை நடிகை முமைத்கான் புக் செய்ததாகவும் மூன்றே நாட்களில் திரும்பி விடலாம் என்று கூறிவிட்டு எட்டு நாட்கள் வரை இழுத்துவிட்டதாகவும் அதற்கான தொகை 15 ஆயிரம் ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் அந்த டிரைவர் கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக நடிகை முமைத்கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச்சாவடியில் செலுத்திய ரசீதுகள், ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றினை வெளியிட்டுள்ளார்.

தன்னை ஏமாற்றியதை போல் இன்னொரு டிரைவரும் ஏமாறக் கூடாது என்பதற்காகவே இந்த விஷயத்தைத்தான் வெளியே செல்வதாகவும் அந்த டிரைவர் கூறியுள்ளார். டிரைவரின் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை நடிகை முமைத்கான் எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் 'புத்தம் புது காலை' என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.

நயன்தாராவுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் திமுக-வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 72 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைந்து உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது