மனைவியின் பிறந்த நாளில் வெளியான விஜயகாந்த் புகைப்படம்: ரசிகர்கள் ஆறுதல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். கம்பீரமாக இருந்த விஜயகாந்த், அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்ததை பார்த்து விஜய்காந்த் ரசிகர்களுக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் ஆறுதல் அடைந்து உள்ளனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் ஓரளவு தெளிவாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதை இந்த புகைப்படங்கள் நிரூபிப்பதாகவும், மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று எனது மனைவி
— Vijayakant (@iVijayakant) March 18, 2022
திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது...#PremalathaVijayakant | @vj_1312 | #Shanmugapandian pic.twitter.com/yfX1cU0w6x
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com