மனைவியின் பிறந்த நாளில் வெளியான விஜயகாந்த் புகைப்படம்: ரசிகர்கள் ஆறுதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். கம்பீரமாக இருந்த விஜயகாந்த், அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்ததை பார்த்து விஜய்காந்த் ரசிகர்களுக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் ஆறுதல் அடைந்து உள்ளனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் ஓரளவு தெளிவாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதை இந்த புகைப்படங்கள் நிரூபிப்பதாகவும், மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் முன்னணி இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே நேரத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், சிறப்பு தோற்றம் என பல படங்களில் நடித்து வருகிறார் .

திருமண நாளில் ஸ்ரேயா சரண் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சமந்தாவுடன் ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர்: வைரல் புகைப்படம்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று 'யசோதா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

'ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா': பீஸ்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக்குத்து  பாடலின் தாக்கமே இன்னும் சமூக வலைதளங்களில் இருந்து விடுபடாத நிலையில் சற்று முன்னர் இரண்டாவது

உலகின் 8 நகரங்களில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய நடிகை: வைரல் வீடியோ

'அரபிக்குத்து'  பாடலுக்கு உலகின் 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.