உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி:  கேப்டன் மகனின் புதிய முயற்சி..!

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி The Final Lap Tour 2023 இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 சென்ட்-இன் Get Rich or Die Tryin ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ் பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட Get Rich or Die Tryin பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள In da club, p.i.m.p, மற்றும் candy shop போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட், நான் இந்தியாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

டராக்டிகல் கான்சர்ட் சிஇஓ ஆன வம்சிதரன் கௌதம ராஜன் இதற்கு முன்பு சர்வதேச ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் ஆகிய ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்து வந்து கான்சர்ட் செய்தவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கிராமி மற்றும் எமி விருந்தினரான ஏகான் அவர்களை நம் தமிழில் லவ்வந்தம் பாடலுக்கு இணைந்து பணியாற்ற வைத்த புகழ் இவரை வந்து சேரும். இது இல்லாமல் பல சர்வதேசிய கலைஞர்களுடன் ஷோஸ் செய்த பெருமையும் வம்சிதரன் கௌதமராஜனுக்கு கொண்டு சேரும்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறும்போது, திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

More News

கணவரின் அணைப்பில் சிறைபட்ட நடிகை காஜல் அகர்வால்… வைரலான ரொமான்ஸ் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால்

திடீர் ரன் அவுட்… இந்திய அணிக்காக கலங்கி அழுத தோனி... ஆண்டுகள் கடந்தும் ரணமான சம்பவம்!

இந்திய அணியை கரை சேர்ப்பதற்காக கடைசி வரை போராடி தோற்றுப்போன தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

காதலரை கைப்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில்  சேர்ந்து விட்டாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பது மட்டும் இன்றி விஜய் டிவியில் உள்ள ஒருவருடன் திருமணமும் நடந்து விடும் என்று காமெடியாக கூறப்படுவது உண்டு.

தமன்னாவின் 'காவாலா' பாடலின் டான்ஸ்.. காதலர் விஜய் வர்மாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை

என்ன ஆச்சு திஷா பதானிக்கு? டூ பீஸ் உடையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த 'கங்குவா' நாயகி..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள்