அப்பாவை அப்படியே உரிச்சு வைத்தால்போல் உள்ளது. வைரலாகும் கேப்டன் மகனின் போட்டோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் சாதனை செய்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படம் கடந்த 80களில் விஜயகாந்தை பார்த்தது போல் உள்ளது என்றும் அப்படியே அப்பாவை உரிச்சு வைத்தால்போல் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதலில் வில்லனாகவும் அதன்பின் முக்கிய கேரக்டர்களில் நடித்த விஜயகாந்துக்கு போலீஸ் கேரக்டர் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருந்தது. கேப்டன் பிரபாகரன், வல்லரசு, ஊமை விழிகள், சேதுபதி ஐபிஎஸ், மாநகரக்காவல் உள்பட பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
தமிழ் திரையுலகில் கமல், ரஜினி என இரண்டு ஆளுமைகள் இருந்த நேரத்திலேயே விஜய்காந்தின் படங்கள் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு அரசியல் ஆளுமைகளுக்கு இடையில் அவர் அரசியல் கட்சியை தொடங்கி தனது கட்சிக்கான ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை எடுத்து சாதனை செய்தார். இதனை அடுத்து இரு திராவிட கட்சிகளும் அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க போட்டி போட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன் தனது சமூக வலைத்தளத்தில் கருப்பு வெள்ளையில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அப்படியே கடந்த 80களில் விஜயகாந்த்தை பார்த்தது போலவே இருப்பதாகவும் அப்பாவை அப்படியே உரித்து வைத்தது போல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்து விஜய பிரபாகரனின் இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments