மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட விஜய பிரபாகரன்..  நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2024]

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் வெற்றி, தோல்வி குறித்த தகவல்களும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள சில வேட்பாளர்கள் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்தாலும் அதன் பின்னர் தோல்வியை தழுவி உள்ளனர்.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த நிலையில் அதன் பின்னர் இழுபறியில் இருந்த நிலையில் கடைசியில் 4,839 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ள விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இது ஒரு முடிவு அல்ல, இனிமேல் தான் ஆரம்பம்’ என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் தனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி.. இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில்

2024 பாராளுமன்ற தேர்தல்.. திரையுலகினர்களுக்கு கிடைத்த வெற்றியும் தோல்வியும்..!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஒரு சில திரையுலக பிரபலங்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் சிலர் வெற்றி முகமாகவும் சிலர்

தோல்வி என்றாலும் அரசியல் பயணம் தொடரும்.. நடிகை ராதிகா தெரிவித்த நன்றி..!

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்ற நிலையில் தோல்வி அடைந்தாலும் தனது சமூகப் பணி மற்றும் மக்கள் நல பணி தொடரும்

ஒரே படத்தில் ரஜினியும் என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்கிறார்களா? டபுள் மாஸ் படமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா இருவரும் தனித்தனியாக நடித்தாலே அந்த படங்கள் மாஸ் படங்களாக இருக்கும் என்ற நிலையில் தற்போது ஒரு படத்தில்

'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. அப்ப 'விடாமுயற்சி' என்ன ஆச்சு?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இப்போது வரை அந்த படத்தின் படப்பிடிப்பு 60% வரை தான் முடிந்திருப்பதாக