கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அடுத்த படம்.. முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் மூன்றாவது படத்தின் முக்கிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனை அடுத்து அவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ’மதுரவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். பிஜி முத்தையா இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சண்முக பாண்டியன் எந்த படத்தில் நடிக்காத நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை அன்பு என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ நாளை வெளியாகிறது. நீண்ட நாட்களாக ரசிகர்கள் முன் தோன்றாத விஜயகாந்த் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது என்பது அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
எனது இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர், நாளை (25/08/2023) வறுமை ஒழிப்பு தினமான எனது பிறந்த நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #சண்முகபாண்டியன் #ShanmugaPandian pic.twitter.com/PKz9jo18At
— Vijayakant (@iVijayakant) August 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com