பிரபல நடிகருடன் கேப்டன் மகன் சண்முக பாண்டியன்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரபல நடிகருடன் இணைந்து கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்க இருக்கும் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் ’தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை நேற்று விஜயகாந்தின் பிறந்த நாளில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
With the Blessings of #CaptainVijayakanth on his Birth Anniversary
— ponram (@ponramVVS) August 25, 2024
New Beginning, New Story! 🎥🚀 kickstarts
Director @ponramVVS 's next starring @realsarathkumar #ShanmugaPandian
Produced by #StarCinemas #ProductionNo1 @mukesh_chelliah
Music by @thisisysr pic.twitter.com/9FA7k51ZVc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com