'கோட்' படத்தில் விஜயகாந்த் எத்தனை நிமிடம்.. இத்தனை பிரபலங்களும் சிறப்பு தோற்றமா?

  • IndiaGlitz, [Wednesday,July 10 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரது காட்சி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. கேப்டன் விஜயகாந்த் காட்சிகளை தன்னுடைய அனுமதி இன்றி யாரும் உருவாக்க கூடாது என்று சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்த நிலையில் ’கோட்’ படக்குழுவினர் முறைப்படி அவரிடம் அனுமதி வாங்கி தான் இந்த காட்சிகளை படத்தில் இணைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் ’கோட்’ திரைப்படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே வருவதாகவும் ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட அவரது காட்சிகள் அவர் உயிருடன் இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பாரோ அதேபோல் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் த்ரிஷா, சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு ஆகியவர்களும் சில நிமிடங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்றும், குறிப்பாக த்ரிஷா ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’கோட்’ திரைப்படம் குறித்து வெளியாகும் தகவல்களை பார்க்கும்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.