சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர்.. வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர் என பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைத்துள்ள இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.
தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைத்த வேறு சில கோரிக்கைகள் இதோ:
1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.
2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .
3. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.
திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறைசாற்றும் விதமாக, இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர். திரு ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் திருமதி ப்ரியா ஆகியோருக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம் என தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout