நல்ல உழைக்கணும், நாற்பதிலும் ஜெயிக்கணும்: விஜயகாந்தின் ஒருவரி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின்னர் முதல்முறையாக ஒரு வரியில் பதில் சொல்லும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த பேட்டி இதோ:
நேர்காணல் செய்தவர்: வணக்கம் கேப்டன்
விஜயகாந்த்: வணக்கம் சார்
நேர்காணல் செய்தவர்: எப்படி இருக்கீங்க கேப்டன்?
விஜயகாந்த்: நல்லா இருக்கேன் சார் நான்
நேர்காணல் செய்தவர்: உடல்நிலை எல்லாம் எப்படியிருக்கு?
விஜயகாந்த்: உடல்நிலை எல்லாம் நல்லாயிருக்கு
நேர்காணல் செய்தவர்: அமெரிக்கா போயிட்டு வந்ததுக்கு அப்புறம் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு?
விஜயகாந்த்: நல்லாயிருக்கேன்... நல்லாயிருக்கேன்
நேர்காணல் செய்தவர்: தமிழக மக்கள் எல்லாருமே இந்தத் தேர்தலைப் பொறுத்த அளவுக்கு, மற்ற பிரச்சாரங்களை விட தேமுதிக தலைவர் எப்போது வருவார், என்ன பேசுவார் என்று காத்துட்டு இருக்காங்க?
விஜயகாந்த்: கூடிய விரைவில் வருவேன் சார். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள்
நேர்காணல் செய்தவர்: தொடர்ச்சியா பிரச்சாரத்துக்குப் போவீங்க?
விஜயகாந்த்: அது டாக்டர் அட்வைஸ் படி தான் செய்ய முடியும்.
நேர்காணல் செய்தவர்: இப்போ அதிமுக - தேமுதிக கூட்டணி எப்படியிருக்கு கேப்டன்
விஜயகாந்த்: அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும்
நேர்காணல் செய்தவர்: ஏன் திமுக கூட்டணி தோற்கும் என்று சொல்கிறீர்கள்?
விஜயகாந்த்: திமுக - தில்லு முல்லு கட்சி
நேர்காணல் செய்தவர்: அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான போட்டி எப்படியிருக்கு கேப்டன்?
விஜயகாந்த்: தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கின்ற போட்டி
நேர்காணல் செய்தவர்:அதில் நிச்சயமாக அதிமுக - தேமுதிக வெற்றி.. (என முடிக்கும் முன்பே)
விஜயகாந்த்: தர்மம் தான் ஜெயிக்கும்... தர்மம் தான் ஜெயிக்கும்.
நேர்காணல் செய்தவர்: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
விஜயகாந்த்: மோடி நல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
நேர்காணல் செய்தவர்: தேமுதிக தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
விஜயகாந்த்: நல்லா உழைக்க வேண்டும்; 40-ம் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #நாடாளுமன்றதேர்தல் |#நாளைநமதே | #நாற்பதும்நமதே pic.twitter.com/QgDMCnFv0m
— Vijayakant (@iVijayakant) April 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments