ஜெயலலிதா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,December 07 2016]

தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல்நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.