'கோட்' படத்தில் கேப்டன் விஜயகாந்த்.. எந்த படத்தின் கேரக்டர் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் ’கேப்டன் பிரபாகரன்’ படத்தில் உள்ள கேரக்டரை தான் ’கோட்’ படத்தின் விஜயகாந்த் கேரக்டராக பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். எனவே கேப்டன் பிரபாகரன் படத்தில் உள்ள பிரபாகரன் கேரக்டர் தான் ’கோட்’ திரைப்படத்தில் வர இருப்பதாகவும் குறிப்பாக காவல்துறை உயர் அதிகாரியாக விஜயகாந்த் ஏஐ மூலம் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கேப்டன் விஜயகாந்தை மீண்டும் அதே கேப்டன் பிரபாகரன் கேரக்டரில் பார்க்க இருப்பதை அடுத்து விஜயகாந்த் ரசிகர்களும் ’கோட்’ திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

More News

'கோட்' படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. செப்டம்பர் 20ல் ரிலீஸாகும் 7 தமிழ் படங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த தேதியில் வேறு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகையின் நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட்.. ஒரு சில மணி நேரங்களில் 50 லட்சம் லைக்ஸ்..!

பிரபல நடிகை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அது குறித்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் ஒரு சில மணி நேரத்திற்குள் 50 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.

கமல்ஹாசன் - சல்மான்கான் திரைப்படம்.. ரூ.1000 கோடி வசூல் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக இருப்பதாகவும் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின்

முதல்முறையாக பிகினி போஸ் கொடுத்த அஜித் பட நடிகை.. குவியும் லைக்ஸ்..!

அஜித் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கவின் படம்.. சிவகார்த்திகேயனுடன் மோதலா?

கவின் நடித்த 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதாக கூறப்படுகிறது.