மீண்டும் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த்: ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரண்டு ஆளுமையான நடிகர்கள் இருந்தபோதே விஜயகாந்த் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார் என்பதும் அவரது படங்கள் ஏராளமானவை வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980ஆம் ஆண்டு ’தூரத்து இடி முழக்கம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான விஜயகாந்த், ஆரம்பகாலத்தில் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தாலும் அதன்பின் அனைத்து படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்த ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு புதிய திருப்பத்தை கொடுத்தது என்பதும் அதன் பின் தொடர்ச்சியாக பல ஆக்ஷன் படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில் அவர் கடைசியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout