ஆளுனர் ஆட்சி அவசியமா? கேப்டன் விஜயகாந்த் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தி ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்ப நிலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் நிலவுகிறது. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களும் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் ஆளுனர் முடிவே மத்திய அரசின் முடிவு என்றும் கூறிவிட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வரவிருக்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து கருத்து கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'தமிழகத்தில் ஆளுனர் ஆட்சி வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து கூறியபோது, 'நிரந்திர முதல்வர் இல்லாதது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல என்றும், தற்போதைய அரசியல் சூழலுக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments