திரையுலகில் 40 ஆண்டுகாலம் சாதனை செய்த விஜயகாந்த் .. ஒரு பார்வை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் இன்று காலமான நிலையில் அவர் திரை உலகில் 40 ஆண்டுகள் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை செய்து உள்ளார் என்பதும் அவரது ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த 1979 ஆம் ஆண்டு ’இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ’ஏ’ சான்றிதழ் பெற்றிருந்த இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார்.
விஜயகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் ’தூரத்து இடி முழக்கம்’. இந்த படத்தை அடுத்து அவர் ஏராளமான படங்களில் நடித்தார் என்பதும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு மல்லி, நெஞ்சிலே துணிவிருந்தால், பார்வையின் மறுபக்கம், சட்டம் சிரிக்குது, சாட்சி, நூறாவது நாள், வெள்ளை புறா ஒன்று, நல்ல நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள் போன்ற படங்கள் 1980களில் சூப்பர் ஹிட் ஆகியது.
அதன் பிறகு 90களில் அவர் பல ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், பரதன், ஏழை ஜாதி, செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், பெரிய மருது, கருப்பு நிலா, உளவுத்துறை, கள்ளழகர், கண்ணுபட போகுதய்யா போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டுகளில் அவர் அரசியலில் ஈடுபட்டதால் திரைப் படங்களில் நடிப்பதில் ஓரளவு குறைத்துக் கொண்டாலும் ஒரு சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக வானத்தைப் போல, வல்லரசு, நரசிம்மா, தவசி, ராஜ்ஜியம், ரமணா, சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா, கஜேந்திரா, சுதேசி, பேரரசு, தர்மபுரி, அரசாங்கம், போன்ற படங்களில் நடித்தார்.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிட்டத்தட்ட படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்று சொல்லலாம். இருப்பினும் ’விருதகிரி’ என்ற திரைப்படத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு நடித்ததோடு இயக்கவும் செய்தார் என்பதும் அவரது மகன் அறிமுகமான ’சகாப்தம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி, அரசாங்கம், விருதகிரி, சகாப்தம் போன்ற படங்களை அவர் தயாரித்து உள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த் என்பதும் தமிழ் திரை உலக வரலாற்றில் அவரது பங்களிப்பு என்பது மறக்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments