அமெரிக்காவில் புது உற்சாகத்துடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும், அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்காவில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் புது உற்சாகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது 'விரைவில் விஜயகாந்த் கம்பீரக்குரலுடன் திரும்பி வருவார்' என்று அவரது மூத்த மகன் விஜய்பிரபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே என்பது உறுதியாகியுள்ளது.

 

More News

தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய 'காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

குழந்தை பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மரண தண்டனையை உலகின் பல நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை அமலில் உள்ளது.

முடிவுக்கு வந்தது அர்ஜூனின் அடுத்த படம்

ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் 2018ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று.

200 அடியில் பேனர்: ஆரம்பமாகிறது விஸ்வாசம் திருவிழா

தல அஜித் நடித்த விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் திருநாள் விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

பிரபல நடிகரின் 2 வங்கிக்கணக்குகள் முடக்கம்: ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் அதிரடி

பிரபல தெலுங்கு நடிகரும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்' படத்தின் நாயகனுமான மகேஷ்பாபுவின் இரண்டு வங்கிக்கணக்குகளை ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.