என் மேல கை வச்சிட்டு நீ வெளியில போய் பாரு.. மிரட்டும் கேப்டன் விஜய்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே அதிரடி சம்பவங்கள் நடந்து வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் ஏற்கனவே தயார் நிலையில் வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கேப்டன் விஜய், சக போட்டியாளரை மிரட்டும் வகையில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேப்டன் விஜய் போட்டியாளர்களிடம் பேசும்போது ’அவர் என் மேல் ஷுவால் இடித்துக் கொண்டு சென்றார். ஏனெனில் எனக்கு திடீரென கோபம் வந்துவிடும், அப்படியே நான் கையால் பின்னாடி அடித்தால், உன் மூக்கு உடைஞ்சிடும், வாய் உடைந்துவிடும், என் மேல ரொம்ப பாசமா இருக்கிற பசங்க வெளியில் இருக்காங்க, நீங்க வெளியில போயிட்டீங்கன்னு வச்சுக்கோங்க, வேற மாதிரி ஆயிடும்' என்று மிரட்டும் வகையில் பேசினார்.

அப்போது பவா செல்லத்துரை, விஜய் சொல்றது சரிதான் என்று யாரையாவது சொல்ல சொல்லுங்கள் என்று சொல்கிறார். அப்போது விஷ்ணு எழுந்து, ‘இப்பொழுது நான் செருப்பால் உன்னை தட்டி விட்டேன் என்று வைத்துக்கொள், உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்று கூற, நீ முதல்ல செருப்பால் தட்டி பாரு’ என்று விஜய் கூற இருவரும் மோதிக் கொள்ளும் வகையில் பேசுகின்றனர்.

அப்போது திடீரென பிரதீப் எழுந்து ’நான் எல்லாரையும் அடிக்க போறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அப்போது பிரதீப் இடம் மாயா ’உங்க பிரச்சனை என்னிடம் சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டு போய்யா என்று அவரை மரியாதை இல்லாமல் சொல்லிவிட்டு போவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் இந்த பிக் பாஸ் சீசனில் ஒரு அடிதடி விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி சொன்ன சின்மயி.. காரணம் என்ன?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை

அதுக்கு மேல் உண்மைய சொல்லணும்னா, லியோ தான் உயிரோடு வந்து சொல்லணும்: 'லியோ' டிரைலர்..!

 தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

'கமல் 233' படத்தின் இசையமைப்பாளர் இவரா? 17  வருடங்களுக்கு பின் மீண்டும் மேஜிக்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233வது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

என் முன்னாடி கடவுள் வந்து நின்னா கூட என்னை நான் மாத்திக்க மாட்டேன்.. பிக்பாஸ் போட்டியாளர்..!

 கடவுள் வந்து என் முன்னால் நின்று, என்னை மாற்றிக்கொள்ள சொன்னால் கூட என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிக் பாஸ் போட்டியாளர் கூறிய புரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்சார் அதிகாரிகள் மீது விஷால் கூறிய புகார்.. சிபிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..!

சென்சார் அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில் இந்த புகார் மீது சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.