மாறப்போகும் கேப்டன்.. டைட்டில் வின்னருக்கு ஒருவர் கூட ஆதரவு கிடையாதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருந்து வரும் நிலையில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி அந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் கேப்டன் பதவியை இழப்பார் என்றும் அதுமட்டுமின்றி அவர் அடுத்த வார நேரடி நாமினேசனில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் ஒரு டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் கேப்டன் மாற்றப்பட்டால் யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்று போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவராக வந்து கேப்டனுக்கு நிற்கும் போது அவருக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதில் கூல் சுரேஷ் மற்றும் அர்ச்சனாவுக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது. அதேபோல் விஷ்ணு மற்றும் மணிக்கும் ஓரளவு ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் டைட்டில் வின்னர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் விக்ரம் கேப்டன் பதவிக்கு வந்து நின்றபோது போட்டியாளர்களில் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. உடனே அவர் ’அடப்பாவிங்களா ஒருத்தராவது எனக்கு ஆதரவு கொடுங்கடா’ என்று கெஞ்சும் நிலைமை ஏற்பட்டது.
இதனை அடுத்து அர்ச்சனா மாயாவை அலேக்காக தூக்கி கொண்டு வந்து கேப்டன் பதவிக்கு நிற்க வலியுறுத்தினார். இந்த நிலையில் கூல் சுரேஷ்க்கும், அர்ச்சனாவுக்கும் அதிக வாக்குகள் கிடைத்தது என்று நிக்சன் கூற அப்போது விஷ்ணுவுக்கு மணிக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது
அப்போது ’ஒருதலை பட்சமாக கேப்டன் செயல்படுகிறார்’ என்று தினேஷ் சொல்ல, உடனே நிக்சன் ஆத்திரமாகி ’நீங்கள் மணி என்கிறீர்கள், அவர்கள் விஷ்ணு என்கிறார்கள், நான் யாருக்கு ஆதரவாக சொல்வது? என கேட்பதுடன் இன்றைய இரண்டாவது படமாக முடிவுக்கு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout