close
Choose your channels

'தளபதி 68' படத்தில் இணையும் 'கேப்டன் மில்லர்' தொழில்நுட்ப கலைஞர்.. வெங்கட் பிரபு அதிரடி..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு கவனித்து வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு சித்தார்த்தன் நுனி என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ’வெந்து தணிந்தது காடு’ ’கேப்டன் மில்லர்’ போன்ற படங்களிலும், கன்னடத்தில் ’லூசியா’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment