'தளபதி 68' படத்தில் இணையும் 'கேப்டன் மில்லர்' தொழில்நுட்ப கலைஞர்.. வெங்கட் பிரபு அதிரடி..!

  • IndiaGlitz, [Monday,August 21 2023]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு கவனித்து வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு சித்தார்த்தன் நுனி என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ’வெந்து தணிந்தது காடு’ ’கேப்டன் மில்லர்’ போன்ற படங்களிலும், கன்னடத்தில் ’லூசியா’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகர் தலைவாசல் விஜய் மகள் திருமணம்.. தமிழக கிரிக்கெட் வீரர் தான் மாப்பிள்ளை..!

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனாவை தமிழக கிரிக்கெட் வீரர் திருமணம் செய்து கொண்டார்.

மோடி மீது அதிருப்தி இருக்கலாம்.. அதுக்காக சந்திராயன் 3ஐ கிண்டல் செய்வதா? பிரபல நடிகருக்கு கண்டனம்..!

கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய 'சந்திராயன் 3' விண்கலம் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலகமே இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளது.

'விக்ரம்', 'ஜெயிலர்' நடிகர் ஜாபரின் காதலியா இவர்? ரஜினிகாந்த் வாழ்த்து..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜாபரின் காதலி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில்

இந்த மூன்று நடிகைகளும் 'தளபதி 68' படத்தில் இல்லை: உறுதி செய்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் இந்த மூன்று நடிகைகளும் படத்தின் ஹீரோயின் இல்லை என்று இயக்குனர் வெங்கட் பிரபு உறுதி செய்துள்ளார்.

இயக்குனரிடம் என்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்: அடுத்த படம் குறித்து அர்ஜூன் தாஸ்..!

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ்  நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன்