close
Choose your channels

நாளை வெளியாகும் 'ஜெயிலர்' படத்துடன் இணைந்த தனுஷின் 'கேப்டன் மில்லர்': அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டிரைலர் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சற்றுமுன் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசரை நாளை முதல் பெரிய திரையில் கண்டு மகிழலாம் என்று அறிவித்துள்ளது.

நாளை ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் 3500 திரையரங்குகளில் அதாவது தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ‘ஜெயிலர்’ வெளியாகும் திரையரங்குகளில் ‘கேப்டன் மில்லர்’ டீசரை காணலாம் என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார் என்பதும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment