நாளை வெளியாகும் 'ஜெயிலர்' படத்துடன் இணைந்த தனுஷின் 'கேப்டன் மில்லர்': அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டிரைலர் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சற்றுமுன் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசரை நாளை முதல் பெரிய திரையில் கண்டு மகிழலாம் என்று அறிவித்துள்ளது.

நாளை ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் 3500 திரையரங்குகளில் அதாவது தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ‘ஜெயிலர்’ வெளியாகும் திரையரங்குகளில் ‘கேப்டன் மில்லர்’ டீசரை காணலாம் என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார் என்பதும், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சேலையை இப்படி கூட கட்டலாமா? எருமை சாணி ஹரிஜாவின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

யூடியூப் மூலம் பிரபலமான எருமை சாணி ஹரிஜா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் வித்தியாசமான முறையில் சேலை அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை

இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் 'உயிர் தமிழுக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனரான அமீர் நாயகனாக நடிக்கும் 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

4 தமிழ் இயக்குனர்களை புகழ்ந்த விஜய் தேவரகொண்டா.. 'குஷி'  டிரைலர் ரிலீஸ் விழாவில் சுவாரஸ்யம்..!

விஜய் தேவரகொண்டா, சமந்தா இயக்கத்தில் நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா இன்று நடைபெற்ற நிலையில் சற்றுமுன் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நான் பேகம் இல்லை.. பிராமின்.. விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் 'குஷி' டிரைலர்..!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ஜெயிலர்' படத்தின் ரன்னிங் டைம்.. அண்ணாத்த படத்தின் அதே ரன்னிங் டைம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது