'கேப்டன் மில்லர்' கதை பிரபல நடிகர் எழுதிய நாவலின் காப்பியா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை வித்தியாசமாகவும் தற்போதைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்த நிலையில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய ’பட்டத்து யானை’ என்ற கதையின் காப்பி தான் ’கேப்டன் மில்லர்’ படத்தின் கதை என குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வேல ராமமூர்த்தி எழுதிய ’பட்டத்து யானை’ நாவலின் பதிப்பாளர் வேடியப்பன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையை சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்பு பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாக பேச முடிகிறது. பார்க்க முடிகிறது. புதிய நூல்களை தேடித்தேடி வாங்குகிறார்கள்.
வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தை புரிந்து கொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் அப்படியே காப்பி அடைத்து பணம் சம்பாதிக்க என்று தெரிந்து கொள்வது ஆபத்தானது.
சமீபத்தில் இந்த போக்கு அதிகரித்து வருவது ஆரோக்கியமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பை திருடுவது போல் ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?.
’கேப்டன் மில்லர்’ திரைப்படம், டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது பட்டத்து யானை நாவலின் அப்பட்டமான திருட்டு என்று எழுத்தாளர் வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டி உள்ளார். படைப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments