திரையுலகிற்கு வரும் 'கேப்டன் மில்லர்' இயக்குனரின் மனைவி.. முதல் படம் குறித்த அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மனைவி ரஞ்சனி திரையுலகிற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ’ராக்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதனை அடுத்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் என்பதும் வரலாற்று கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் மனைவி ரஞ்சனி ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கே.ஆர்.ஜி பிலிம்ஸ் இந்த படத்தை தமிழில் தயாரிக்க உள்ளது.
ரஞ்சனி இயக்கும் படத்தை தயாரிக்கும் கார்த்திக் கூறிய போது ’நான் கேட்டதில்லையே மிகவும் சிறந்த ஆக்சன் கதை இதுதான். எங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம். முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நடக்கும் கதை அம்சம் கொண்ட இந்த படம் குறித்த முழு தகவல்களை விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் திரையுலகில் கிருத்திகா உதயநிதி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெண் இயக்குனர் இருக்கும் நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் மனைவி ரஞ்சனியும் இயக்குனர் ஆகியுள்ளதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
On the occasion of our 6th anniversary, we @KRG_Studios are honoured to announce our first content collaboration with TVF - a powerhouse of stories and storytellers. Together we hope to entertain you even more.#KRGxTVF@TheViralFever @vjsub @yogigraj @vijaykoshy @ArunabhKumar… pic.twitter.com/ieRstzhuH7
— Karthik Gowda (@Karthik1423) July 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments