'கேப்டன் மில்லர்' இயக்குனர் வெளியிட்ட மாஸ் புகைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்து புகைப்படங்களை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு நிமிடம் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர் என்பதும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு தனுஷ் ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.