தோனி கலெக்ஷனில் இணைந்திருக்கும் பழைய கார்… அப்படியென்ன ஸ்பெஷல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு பெயர்போன நம்முடைய கேப்டன் தல தோனி ஏற்கனவே மோட்டர் வாகனங்களில் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான். தற்போது அவருடைய சேகரிப்பில் அதரப்பழசான கார் ஒன்றும் இணைந்திருப்பது பலரையும் ஆச்சர்த்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பண்ணை விவசாயம், செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்று எப்போதும் பிசியாக இருந்துவரும் தல தோனியின் சேகரிப்பில் தொடர்ந்து பைக், புல்லட், கிளாசிக் கார் என்று பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் கலந்துகொண்ட தோனி மஞ்சள் நிறத்திலான பழைய லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கிறார். கடுமையான ஏலத்திற்கு மத்தியில் இந்த காரை வாங்கிய தோனி இதற்கு எவ்வளவு விலை கொடுத்தார் என்பது இதுவரை ரகசியமாகவே இருந்துவருகிறது.
பிக் பாய்ஸ டாய்ஸ் எனும் நிறுவனம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில்தான் தோனி பழைய விண்டேஜ் காரை விலைக்கி வாங்கியிருக்கிறார். 1971 இல் தயாரிக்கப்பட்ட இந்த காரானது பிரிட்டனில் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தோனியின் சேகரிப்பில் ஆடி Q7, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, ஜீப் கிராண்ட் செரோக்கி, ஃபெராரி 599 GTO, ஹம்மர் H2 , ஹார்லி டேவிட்ஸன் ஃபேட்பாய், BSA கோல்டு ஸ்டார், Confederate Hellcat X 32 போன்ற அதிநவீன கார் பைக்குகளும் / யமஹா RD350, பிஎஏஇ ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட க்ளாசிக் மோட்டார் பைக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில் லேண்ட் ரோவர் 3 காரும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com