அடக்கடவுளே… நான் திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன்… மரணத்தில் இருந்து தப்பிய அதிசய மனிதன்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

அமெரிக்காவில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவரை திமிங்கலம் ஒன்று விழுங்க முயற்சித்து இருக்கிறது. திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிய அந்த நபர் சில நிமிடங்களில் உயிர்ப்பிழைத்து இருக்கிறார். இந்தச் சம்பவம் தற்போது கடும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் massachueettls எனும் மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட் எனும் மீனவர் கடந்த 40 வருடங்களாக ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். அதுவும் ஆழ்கடலுக்குள் இருக்கும் லாப்ஸ்ட்டர் எனும் பெரிய இனவகை இறலால்களை இவர் பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக் கிழமையும் மைக்கேல் எப்போதும் போல ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்.

மேலும் மைக்கேல் லாப்ஸ்ட்டரை பிடிப்பதற்காக கடலுக்குள் டைவ் அடித்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக திமிங்கலம் ஒன்று அவரை விழுங்க முயற்சித்து இருக்கிறார். திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று விட்ட அவரை, திமிங்கலம் ஒரு சில வினாடிகளில் வாய்க்குள் இருந்து வெளியேற்றி இருக்கிறது. இதனால் மைக்கேல் கடலுக்கு மேற்புரம் வந்து உயிர் தப்பி இருக்கிறார்.

இப்படி திமிங்கலத்தின் வாய்க்குள் சென்றுவிட்டு தப்பிய மைக்கேல் தனது அனுபவம் குறித்து “திடீரென பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன். எல்லாமே இருளாக இருந்தது. நான் நகர்வதை என்னால் உணர முடிந்தது. கடவுளே நான் ஒரு சுறாவால் விழுங்கப்பட்டேன் என நினைத்தேன். என்னைச் சுற்றிப் பற்கள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு பெரிய அளவில் வலியும் இல்லை. நான் ஒரு திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன் எனப் புரிந்துகொண்டேன். என்னை விழுங்குவதற்கு திமிங்கலம் முயற்சி செய்து கொண்டு இருந்தது. பின்பு வெறும் 2 வினாடிகளில் திமிங்கலம் என்னை கடலுக்கு மேல்புறம் துப்பியது. இதனால் காற்றில் தூக்கி வீசப்பட்டேன். ஒருவழியாக உயிர்ப்பிழைத்துக் கொண்டேன்“ எனத் தெரிவித்து உள்ளார்.

பொதுவாகத் திமிங்கலங்கள் மனிதர்களை உண்பதில்லை. மீன்பிடிக்க சென்ற மைக்கேலை டைவிஸ் எனும் திமிங்கலம் விழுங்க முயற்சித்து தற்போது மீண்டும் வாய்க்குள் இருந்து வெளியேற்றி இருக்கிறது. இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.