கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிவகுத்த பாலிவுட் நடிகைகள்… ஸ்டன்னிங் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேசத் திரைப்பட விழாவான 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக பல பாலிவுட் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில் அவர்களது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
உலக அளவில் பிரசித்திப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக பாலிவுட் நடிகை சாரா அலிகான் கலந்து கொண்டுள்ளார். புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான சையிப் அலிகானின் மகளான இவர் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அட்ரங்கி ரே‘ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் இவர் முதல்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
கேன்ஸ் விழாவில் நடிகை சாரா அலிகான் கோல்டன் நிறத்தில் செய்யப்பட்ட பாரம்பரிய எம்பிராய்டரி பொறிக்கப்பட்ட லெஹங்காவை அணிந்திருந்தார். இந்த உடையை அபுஃனி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் வடிவமைத்தாகக் கூறப்படுகிறது.
இந்த விழாவில் முன்னாள் உலக அழகியான மனுஷி சில்லரும் கலந்து கொண்டார். இவர் ஃபேஷன் டிசைனர் ஃபோவாரி வடிவமைத்து இருந்த வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார். ஃபிரில்ஸ் வைக்கப்பட்ட இந்த கவுனில் அவர் எளிமையான மேக்கப்பில் காட்சியளித்தார்.இதேபோல பாலிவுட் நடிகை இஷா குப்தாவும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
அடுத்து பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடாலாவும் கலந்து கொண்டார். சரவணன் அருள் நடிப்பில் வெளியான ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறியப்பட்ட இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிங்க் நிறத்தால் செய்யப்பட்ட கவுனை அணிந்திருந்தார். காரணம் பர்வீன் பாபியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தை பிரதிபலிக்கும் வகையில் பிங்க் நிறத்திலான ஆடை மற்றும் பல்லி உருவம் பொறிக்கப்பட்ட நெக்லஸையும் அவர் அணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments