வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய பாமக..! புதுச்சேரியில் பரபரப்பு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரியில் 10- தொகுதிகளில் போட்டியிட இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதியும், வாக்கு எண்ணப்பட்டு அதன் முடிவுகள் மே-2 ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு தனியாக 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதேபோல் புதுச்சேரியிலும் பேச்சு வார்த்தை நடத்தியதில், அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அதிருப்தியை ஏற்படுத்தியதால் பாமக அதிலிருந்து விலகியது.
பின்பு தனித்து 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. அதிமுக கூட்டணி பாமக-வை சமாதானம் செய்யும் நோக்கில் பேசப்பட்டதை தொடர்ந்து, வேட்புமனுக்கள் பரீசீலனை முடியும் நேரத்தில் பாமக 10 மனுக்களையும் வாபஸ் வாங்கியது. இதனால் கட்சியினர் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com