வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய பாமக..! புதுச்சேரியில் பரபரப்பு...!

  • IndiaGlitz, [Monday,March 22 2021]

புதுச்சேரியில் 10- தொகுதிகளில் போட்டியிட இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதியும், வாக்கு எண்ணப்பட்டு அதன் முடிவுகள் மே-2 ஆம் தேதியும் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு தனியாக 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதேபோல் புதுச்சேரியிலும் பேச்சு வார்த்தை நடத்தியதில், அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அதிருப்தியை ஏற்படுத்தியதால் பாமக அதிலிருந்து விலகியது.

பின்பு தனித்து 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. அதிமுக கூட்டணி பாமக-வை சமாதானம் செய்யும் நோக்கில் பேசப்பட்டதை தொடர்ந்து, வேட்புமனுக்கள் பரீசீலனை முடியும் நேரத்தில் பாமக 10 மனுக்களையும் வாபஸ் வாங்கியது. இதனால் கட்சியினர் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி: பிரபல நடிகர், இயக்குனர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்: விஜய்சேதுபதிக்கும் விருது

67 வது தேசிய விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பல தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனாவால் தள்ளிப்போகிறதா 'சுல்தான்' ரிலீஸ்: எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு தேசிய விருதுகளை பெற்றது 'அசுரன்': படக்குழுவினர் மகிழ்ச்சி

67வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது

ஊழலைப் பற்றி நடிகர் கமல் ஏன் பேசுகிறார்?  விமர்சனத்தால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் “வெற்றிநடை போடும் தமிழகம்“ என அதிமுகவும்,