பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்த வேட்பாளர்...!கைகொடுத்தது நம்ம சித்தி தான்....!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

விருதுநகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்- சமக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்து வருகிறாராம்.

தமிழகத்தில் தேர்தலுக்காக பிரச்சார களங்கள் அனல் தெறித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் போட்டியில் வெகுவாக முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் மநீம - சமக கூட்டணியில், விருதுநகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக மணிமாறன் களமிறங்குகிறார். ஆனால் இவர் சார்பாக தொகுதியில் பரப்புரை செய்ய பேச்சாளர்கள் யாரும் வரவில்லை. தொகுதி விட்டுக்கொடுத்த காரணத்தால் மநீம சார்பாகவும் யாரும் செல்லவில்லை. சொந்த கட்சியினரும் செல்லாததால், மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

அருப்புக்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, இவருக்காக பேசலாம் என முடிவெடுத்தார் கமலஹாசன். கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, தொகுதியை அவர்களுக்கு கொடுத்ததால் கட்சியில் யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. நீங்கள் போக வேண்டாம், அங்கு கூட்டம் கூடாது என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் கமலும் விலகிக் கொண்டாராம். இறுதியாக நடிகை மற்றும் சமக துணை பொதுச்செயலாளரான ராதிகா சரத்குமார் அவருக்காக பிரச்சாரத்தை மேற்கொண்டாராம். அதன்பின்பு மணிமாறன் தொகுதியில் தென்படாமல் இருக்கிறார் என்ற செய்தியும் கசிந்துள்ளது.