'சர்கார்' திரையிடும் தியேட்டர்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,November 01 2018]

'சர்கார்' படத்தின் கதைப்பிரச்சனை சுமூகமாக முடிவடைந்துவிட்டாலும் தினமும் 'சர்கார்' படத்திற்கு புதிது புதிதாக பிரச்சனைகள் கிளம்பி வருகிறது

அந்த வகையில் சர்கார்' படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகள் அதிக கட்டணங்களை வசூல் செய்து வருவதாக உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 'சர்கார்' படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும், சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

'சர்கார்' படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி ரூ.1000 முதல் ரூ.2000 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் அருண்விஜய்

சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டார் படத்தில் நடிகர் அருண்விஜய் அபாரமாக நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது நவீன் இயக்கத்தில் மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்கவுள்ளார்.

அர்ஜூன் மீதான மீடூ விவகாரம்: ஸ்ருதி கூறிய பொய் அம்பலம்.

ஆக்சன் கிங் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை மீடூவில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே.

அஜித் இயக்குனர், ரஜினி-விஜய் தயாரிப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்

சூப்பர் ஹிட் டீமுடன் இணைந்த அருண்விஜய்

'மூடர் கூடம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன், பல வெற்றி படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். சுந்தர் சி தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.