5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுங்கள்...!அமைச்சர் ஜெயக்குமார் மனு....!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

தமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு மற்றும் காட்பாடி உள்ளிட்ட 5 தொகுதிகளில், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, குறிப்பிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று மனு அளித்தார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு மற்றும் காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் விருப்புவெறுப்பில்லாமல் செயல்பட வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.