வங்கியில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்: ஜூலை 1 முதல் அமல்!
- IndiaGlitz, [Thursday,June 20 2019]
வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு சமீபத்தில் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி வரும் ஜூலை 1 முதல் மாதம் ஒன்றுக்கு மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் இலவசமாக பணம் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அதனையடுத்து ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.1 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்கப்படுத்தவே இந்த சேவைக்கட்டணம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நம்முடைய பணத்தை நம்முடைய கணக்கில் செலுத்துவதற்கே சேவைக்கட்டணமா? என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது. இதில் ஒரு பெரிய கொடுமை என்னவெனில் இந்த சேவைக்கட்டணத்திற்கு ஜிஎஸ்டியும் உண்டு என்பதுதான்