close
Choose your channels

யோகிபாபு நடிக்கும் 'கூர்கா' படத்தில் கனடா நடிகை

Tuesday, October 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, விஜய்யின் 'சர்கார்' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாம் ஆண்டன் இயக்கும் 'கூர்கா' படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கனடா நாட்டின் நடிகை ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் 'கூர்கா' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸாவை தேர்வு செய்திருக்கிறார்.

இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, "கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை" என்றார்.

டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த கடத்தல் டிராமா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment