யோகிபாபு நடிக்கும் 'கூர்கா' படத்தில் கனடா நடிகை

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, விஜய்யின் 'சர்கார்' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாம் ஆண்டன் இயக்கும் 'கூர்கா' படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கனடா நாட்டின் நடிகை ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் 'கூர்கா' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸாவை தேர்வு செய்திருக்கிறார்.

இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை என்றார்.

டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த கடத்தல் டிராமா.

More News

சீதக்காதியின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கோலிவுட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு திரைப்படம் என்ற கணக்கில் ரிலீஸ் செய்து வரும் விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'சீதக்காதி' அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.

மீடூ பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் முதல்முறையாக சின்மயி புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஆச்சரியமான தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிதான் இன்றைய கோலிவுட் வெற்றி நாயகனின் ஒருவராக உள்ளார். அவர் நடித்த 'செக்க சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96' ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது

ஜிவி பிரகாஷூக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி

ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு, இசை என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐங்கரன்

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிந்திரன்.