கனடா பிரதமரின் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,March 13 2020]
உலகம் முழுவதையும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முக்கிய விவிஐபிக்களையும் விட்டுவைக்கவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே. ஈரான் நாட்டின் துணை அதிபர், ஈரான் சுகாதார அமைச்சர் மற்றும் பிரிட்டன் நாட்டின் சுகாதார அமைச்சர் உள்பட பல விவிஐபிக்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் தற்போது கனடா நாட்டு பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகேயர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும் அவருடைய ரத்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது மனைவியை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது குறித்து பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தனது மனைவி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தேவையான மருந்துகளை எடுத்து கொண்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.