உங்களுடைய ஹெல்த் இன்ஷுரன்ஸ்ஐ வைத்து கொரோனா நோய்த்தொற்றுக்கு க்ளைம் பண்ண முடியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் நேரத்தில் புதிதாக அதற்கு என்று பாலிசி எடுக்கலாமா? அல்லது ஏற்கனவே இருக்கும் பாலிசிக்களை இதற்கு பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் ஒரு சிலர் எழுப்புகின்றனர். இந்நிலையில் எல்லா வகையான ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசிக்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு க்ளையம் செய்ய முடியும். கொரோனாவுக்கு எனத் தனியாக இன்ஷுரன்ஸ் பாலிசிக்களை எடுக்க தேவையில்லை. ஒருவேளை இதற்கு முன்பு எந்த பாலிசிக்களும் இல்லாமல் இருந்தால் கொரோனா பாலிசிக்களை எடுக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர்.
அண்மையில் SBI ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனம் ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷுரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் உள்ளடக்கத் தொகை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கிறது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு அளவுகள் மற்றும் குறைந்த பிரீமியத் தொகை ஆகியவற்றோடு இணைந்த ஒன்றாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவினங்களையும் இந்த பாலிசி மூலம் க்ளையம் செய்து கொள்ளலாம். இந்த ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசியை இந்தியாவிலுள்ள 28 ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அதனால் உள்ளடக்கத் தொகையைப் பொறுத்து எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஹெல்த் பாலிசிகள் இருக்கிறது என்றால் புதிதாக பாலிசி எதையும் எடுக்கத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா நேரத்தில் டிராவல் பாலிசிக்களை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது. ஒருவேளை ஊரடங்கு பிறப்பிக்காத முன்னால், அரசாங்கத்தின் அறிவுப்பு வராத நிலையில் விமான டிக்கெட்டுகளை எடுத்து இருந்தால் டிராவல் பாலிசிக்களை க்ளைம் செய்ய முடியும். அதுவும் பாலிசி எடுத்து இருக்கும் நிறுவனங்களைப் பொறுத்தே விதிமுறைகள் அமையும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com